அரசுப்பள்ளி மாணவியின் கம்பீரம்.. பின்னால் நின்று பார்த்து வியந்துபோன கலெக்டர்
நீலகிரியில், அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த போது, மாணவி ஒருவர் கம்பீரமாக பேசியதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். தேவாலா அருகே உள்ள பழங்குடியின அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியர், சத்துணவு குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு வகுப்பறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார். அப்போது அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி ஜெனிதா, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளை வரவேற்கும் விதமாக தனது உடல் அசைவுகளோடு தூய தமிழில் கம்பீரமாக பேசினார்.