நீலகிரி கலெக்டர் மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை - "எப்போது வேண்டுமானாலும் மிக கவனம்"

Update: 2024-07-21 08:32 GMT

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் விழுவதும், மண் சரிவு ஏற்படுவதும், வீடுகள் சேதமாவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை பெய்யும் நேரங்களில் மரம், மின் கம்பங்கள் அருகே நிற்பதையும், வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்