கடல் கடந்த காதல்.. அந்தமான் பெண்ணை கரம் பிடித்த குன்னூர் இளைஞர் - தமிழக முறைப்படி நடந்த டும்..டும்..
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்தமான் நிக்கோபார் பெண்ணை கரம் பிடித்துள்ளார். குன்னூர் அருகேயுள்ள சேலாஸ் பகுதியை சேர்ந்த சுதீஸ், அந்தமான் நிக்கோபாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கும் மோனி என்ற இளம்பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. கடல் தாண்டி வெற்றி பெற்ற இவர்களது 9 ஆண்டு காதல். சேலாஸ் முருகன் கோயிலில் வைத்து திருமணத்தில் முடிந்தது.