"நீலகிரியில் நிலச்சரிவு?".. எச்சரிக்கை விடுத்த கலெக்டர்

Update: 2024-08-02 16:39 GMT

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போல நீலகிரி மாவட்டத்திலும் ஏற்படும் என்று பரவும் தகவல் தவறானது என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை உதகை வந்துள்ள நிலையில், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், வயநாடு போன்று நீலகிரியிலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாக கூறினார். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்