அரசு அதிகாரி தங்கும் இடத்தில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு
நீலகிரி இந்து அறநிலையத்துறை நில ஆய்வாளர் தங்கியிருக்கும் விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காஞ்சியில் நில துணை ஆய்வாளராக இருந்த பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது. பாஸ்கர் பதவி உயர்வு பெற்று நீலகிரி குன்னூரில் இந்து அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராகவும், குந்தா, கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். இதையடுத்து காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.