நீலகிரி மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் படுகர் இன மக்களின் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.நுந்தளா கிராமத்திற்கு ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து அங்குள்ள ஹெத்தை அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, படுகு மொழியின் சிறப்பு, வழிபாடு முறை, கலாச்சாரம் ஆகியவை குறித்தும் அதனை பாதுகாப்பது குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதமாக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கொண்டாட்டத்தின் நிறைவாக படுகர் இன மக்கள் தங்களது கலாச்சார இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.