கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் - தெற்கு ரயில்வே

Update: 2023-10-07 10:51 GMT

தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியுள்ளது.

தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவை அளிக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதன் பேரில், 20 கோடி ரூபாய் மதிப்பில், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய ரயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பான நிரந்தர பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது. மூன்று நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக இது அமையவுள்ள நிலையில், ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்