பெண்களிடம் தாலியை கழற்றி உள்ளே செல்ல சொன்னதால் தாம்பரத்தில் பெரும் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில், உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வந்த பெண்களிடம் நகை, மூக்குத்தி, தாலி உள்ளிட்ட ஆபரணங்களை கழட்டுமாறு, தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் பாட்டில்களையும் எடுத்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. கேள்விகள் எளிதாக இருந்தாலும், தேர்வு கண்காணிப்பாளர்களின் கெடுபிடியால் முழு கவனத்தையும் செலுத்தி தேர்வு எழுத முடியவில்லை என தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர்.