திடீர் நிலச்சரிவு.. அடித்து செல்லப்பட்ட 2 பேருந்துகள்.. 63 பேர் கதி என்ன?

Update: 2024-07-12 07:45 GMT

மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் 60க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். காட்மாண்டு நோக்கி சென்ற பேருந்தில் 24 பேரும், மற்றொரு பேருந்தில் 41 பேரும் பயணித்துள்ளனர். அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்துகளை இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பேருந்துகளும் ஆற்றில் கவிழ்ந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இடைவிடாத மழை பெய்து வருவதால் காணாமல் போன பேருந்துகளை தேடும் பணி சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்