நாகை மாவட்டம் பனங்குடியில் உள்ள சிபிசிஎல் எண்ணெய் ஆலையை 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்ய, கோபுராஜபுரம், நரிமணம் முட்டம், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 620 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் நிவாரணம் கேட்டு 140 பேர் பிள்ளை பனங்குடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், தங்களது வாழ்வாதாரத்தை அழித்து விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். இதனிடையே போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அளவிடுவதற்கான பணிகள் நடந்தேறின.