திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் பகுதியில் உள்ள கோயிலில் ஆதித்தொகுடி மக்கள் வழிபாடு செய்ததால், மற்றொரு தரப்பினர் புதிதாக கோயில் கட்டுவதாக கூறி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்துமாரியம்மன் கோயிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபட்டதால், அப்பகுதியில் உள்ள ஒரு பிரிவினர் தனியாக கோயில் கட்டுவது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இக்கோயிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.