நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை..."நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தான்"

Update: 2024-01-21 16:38 GMT

நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது... கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளை குறித்து தொடர்ந்து சேவியர் குமார் புகார் அளித்து வந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை பிரிவு மாநில செயலாளர் சேவியர் பெலிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்... கொலை செய்தவர்களை காவல்துறை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நாம் தமிழர் கட்சி மாநிலம் தழுவிய போராட்டத்தை கையில் எடுக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்