"பட்டியலின பெண் சமைத்தால் என் பிள்ள சாப்பிடாது" - எகத்தாளமாக பேசியவரை மன்னிப்பு கேட்கவிட்ட கலெக்டர்

Update: 2023-09-06 04:21 GMT

காலை உணவு திட்டத்தில் பட்டியலினப் பெண் சமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு துரித நடவடிக்கை எடுத்துள்ளார்...

கரூர் மாவட்டம் வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக சுமதி என்ற பெண் சமையலராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். பட்டியலின சமூகத்தை சார்ந்த அவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் பிரபுசங்கர், சுமதி சமைத்த உணவை சாப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆட்சியர் முன்னிலையிலேயே பட்டியலினப் பெண் சமைக்க எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்பிரமணி என்பவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பகிரங்க மன்னிப்பு கோரியதை அடுத்து, அவர் மீது வழக்குப்பதியாமல் விடுவிக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்