தகாத உறவை தட்டிக்கேட்ட கணவன்..! கள்ளக்காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்..கொடூர மனைவியின் வெறிச்செயல்.. சென்னை அருகே பரபரப்பு சம்பவம்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன். இவருடைய மனைவி பத்மினி. இவர்களுக்கு செந்தில்குமார், ராஜ்குமார் என 2 மகன்கள் இருந்தனர். செந்தில்குமாரின் மனைவியான மேனகாவுக்கும், கார் ஓட்டுநர் ராஜேஷ் கண்ணா என்பவருக்கும் இடையே தகாத உறவில் இருந்து வந்த நிலையில், அதனை செந்தில்குமார் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மேனகா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு கணவரை கொலை செய்துவிட்டு, உடலை செஞ்சி அருகே புதைத்தனர். மேலும், மருமகளின் தகாத உறவு விவகாரம் அறிந்த உயிரிழந்த செந்தில்குமாரின் தந்தை சுப்புராயனும் கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேனகா தலைமறைவாக இருந்த நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் சித்தாலப்பாக்கம் பகுதியில் கள்ளக்காதலன் ராஜேஷ் கண்ணா வீட்டில் பதுங்கி இருந்த மேனகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.