"திருச்சி திமுகவுக்கா..? காங்கிரஸுக்கா..?"கூட்டணி குறித்து சொன்ன திருநாவுக்கரசர் M.P
மகாத்மா காந்தியை விமர்சித்த விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயக மாநாட்டில் திருமாவளவன் வைத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.