மோடியின் அதிரடி மூவ்.. இந்தியாவிற்கு கிடைத்த முதல் வெற்றி | PM Modi | Thanthitv
தேசியக் கல்விக் கொள்கையின்படி, இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்க வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, இங்கிலாந்தின் பிரபல சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழத்தின் புதிய கல்வி வளாகத்தை ஹரியானா மாநிலம் குருகிராமில் நிறுவ மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்கான கடிதத்தை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கினார். இந்த முயற்சி சர்வதேச அளவில் இந்தியாவின் கல்வி சூழலை மேம்படுத்தும் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்தியாவில் கல்வியை சர்வதேசமயமாக்கும் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.