கட்டிமுடிக்கும் முன்னே உயிர் காவு வாங்கிய பாலம்.. நள்ளிரவில் கம்பியில் தொங்கிய வாலிபர்

Update: 2024-08-14 08:55 GMT

மயிலாடுதுறை அருகே பாலம் கட்டுமானத்துக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த இளைஞர், தலையில் கம்பி குத்தியதால் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் சிறு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் போதிய அளவு மூடாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழுவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாலத்தின் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில், மணிகண்டனின் தலை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் , நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்