"எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க"..பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்..நேராக எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்

Update: 2023-10-05 05:21 GMT

காஞ்சிபுரத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி கண்டிகையை சேர்ந்த ஹிரிஷ் என்பவரும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஆர்த்தி என்பவரும் காதலித்து, கிறித்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டி, இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்