"உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பெயர்.." - உச்சநீதிமன்ற நீதிபதி சொன்ன தகவல்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதற்காக சிறப்பான விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மதுரையில் உள்ள இளம் வழக்கறிஞர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக பாராட்டிய நீதிபதி சுந்தரேஷ், மதுரை வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தேர்வு பட்டியலில் குறைவாக இருப்பதாகவும் இனி நீதிபதிகள் தேர்வுகளில் மதுரை இளம் வழக்கறிஞர்கள் அதிகமாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.