வீட்டை விட்டு பறந்த காதல் ஜோடி - காவல்துறை அலுவலகத்தில் தஞ்சம் - பாதுகாப்பு வழங்கக்கோரி மனு

Update: 2023-11-17 02:56 GMT

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பிரியதர்ஷினி என்ற மாணவி, அதே கல்லூரியில் படித்த பிரசாத் மணிகண்டன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் தம்பதிகள், உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் புகார் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்