சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Update: 2024-02-25 09:25 GMT

கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சாா்பில் தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் புறநகர் பகுதியில் இருந்து மாநகரப் பகுதிக்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரயில் சேவை இல்லாததால் பயணிகள் சொந்த வாகனங்கள் மூலமாகவும் பேருந்துகள் மற்றும் மெட்ரோ உதவியுடனும் பயணம் செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், உள்ளிட்ட புறநகர் பகுதியில் இருந்து மாநகருக்குள் பயணிகள் வந்து செல்ல வசதியாக எழும்பூர் , சென்ட்ரல், தியாகராய நகர், பிராட்வே, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் மற்றும் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் 2 வழித்தடங்களிலும் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்