"இத்தனை கிலோ கஞ்சாவ அந்த குட்டி இடத்துல எப்படியா ஒளிச்சி வச்ச?" - போலீசையே மிரளவிட்ட லாரி ஓட்டுநர்

Update: 2024-08-18 09:13 GMT

இத்தனை கிலோ கஞ்சாவ அந்த குட்டி இடத்துல எப்படியா ஒளிச்சி வச்ச?" - போலீசையே மிரளவிட்ட லாரி ஓட்டுநர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் ஓடிசாவில் இருந்து கஞ்சா கடத்தப்படுதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கலுகொண்டப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கன்டெய்னர் லாரி ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். இதில் லாரி ஓட்டுநரின் இருக்கையின் அடியில் பதுக்கி வைக்கப்பட்ட 20 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டது. லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்