கோயில் திருவிழா.. மாவிளக்கு ஊர்வலத்திற்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்.. சாலை மறியலில் குதித்த மக்கள்.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த ஹைவே

Update: 2024-06-19 09:53 GMT

கிருஷ்ணகிரி அருகே கோயில் திருவிழாவில் கத்திகளுடன் நுழைந்து மர்மநபர்கள் தகராறு செய்த விவகாரத்தை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி அடுத்த பனந்தோப்பு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 2 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவில் கிராம மக்கள் அனைவரும் மாவிளக்கு ஊர்வலத்திற்கு தயரான நிலையில், அப்போது திடீரென பைக்கில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், கிராம மக்களை பட்டா கத்தியை காட்டி அச்சுறுத்தி அங்கிருந்த பேனர்களை கிழித்ததும், தட்டிக்கேட்ட இளைஞர்களை தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள காவல்நிலையம் முன் குவிந்த கிராம மக்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், கிராமத்துக்குள் புகுந்து தகராறு செய்த கும்பலை கைது செய்யவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டதால் நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஸ்தம்பித்து போன நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்