கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல்.. கண்டித்த மாமியாரை கொன்று எரித்த கொடூரம்

Update: 2024-06-26 02:10 GMT

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மருமகள், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கரிய பெருமாள் வலசை பகுதி அலமேலு என்பவர், தனது மகனுக்கு தம்பி மகளான பவித்ரா என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். பவித்ரா திருமணமான பின்பு தனது வீட்டின் அருகே உள்ள கல்லூரி மாணவன் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்பு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசியபோது மாமியார் அலமேலு இருவரையும் கண்டித்துள்ளனர். இரண்டாவது முறையாக பார்த்த அவர் ஊராரிடம் கூறப்போவதாக மிரட்டியதால் அவர்கள் இருவரும் சேர்ந்து அலமேலுவை கழுத்தை நெறித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற சிங்காரப்பேட்டை காவல்துறையினர் பவித்ரா மற்றும் கல்லூரி மாணவன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுடன் தனது மாமியாரை கொலை செய்து எரித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்