செய்ய கூடாத அசிங்கத்தை செய்த மனைவி... நேரில் பார்த்தவுடன் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்

Update: 2024-06-13 03:18 GMT

செய்ய கூடாத அசிங்கத்தை செய்த மனைவி... நேரில் பார்த்தவுடன் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்

கிருஷ்ணகிரி அருகே நாத்தனார் மகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் பகுதியை சேர்ந்த பழனி-சத்யா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பழனியின் அக்கா மகன் மாரியப்பன் என்பவர் இவர்களுடைய வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, சத்யாவுக்கும், மாரியப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதையறிந்த பழனி மற்றும் அவருடைய மகன்கள் சத்யாவை கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று சத்யா மட்டும் வீட்டில் இருந்த நேரத்தில் மாரியப்பன் அங்கு வந்துள்ளார். இதைப்பார்த்த பழனி மனைவி சத்யாவை கழுத்தை அறுத்து கொன்றதுடன், மாரியப்பனையும் வெட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்