பிராய்லர் கோழி சமைத்து சாப்பிட்ட குடும்பம்...கண்முன் துடிதுடித்து உயிரை விட்ட மகன்

Update: 2024-06-25 06:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே வயிற்று வலி ஏற்பட்டு, 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் பனந்தோப்பு காலணியை சேர்ந்த தம்பதி மணி, ரம்யா. இவர்களுக்கு 8 வயதில் சரண் என்ற மகனும், 7 வயதில் அரண் என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தோடு அனைவரும் பிராய்லர் கோழியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதில், சரணுக்கு மட்டும் வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். அவருக்கு கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். பின்னர், இரவு நேரத்தில் மீண்டும் சரணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மீண்டும் சரண் கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஒசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்