கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த அவர்கள், இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.