சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளியை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

Update: 2024-08-20 15:33 GMT

முதற்கட்ட விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன், எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் என்.சி.சி பெயரை தவறாக பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு, போலியாக என்.சி.சி முகாம் நடத்தி மாணவர்களிடம் இருந்து பல ஆயிரம் கணக்கில் பணம் வசூல் செய்து மோசடு செய்ததும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், சிவராமன் தொடங்கி, பர்கூர், கந்தி குப்பத்தில் இயங்கி வரும் கிங்ஸ்லி ஸ்கூலின் முதல்வர், தாளார் என இதுவரை 11 பேரை கைது செய்திருக்கும் போலீசார், வழக்கில் தலைமறைவாக உள்ள சுதாகர் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் கைதின்போது தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் காலை உடைத்துக் கொண்ட சிவராமன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்