கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம்பட்டியில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டியை சேர்ந்த மாணவி ஜெயசுதா. பிஎஸ்சி நர்சிங் படித்து வந்த இவர், பென்னாகரத்தை சேர்ந்த தனது ஆண் நண்பர் கௌதமுடன், இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின்னர், இருவரும் வீடு திரும்பிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம்பட்டி ஏரிக்கரை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பின் மீது மோதியது. இதில், ஜெயிசுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தலைமறைவாகியுள்ள கௌதமை போலீசார் தேடி வருகின்றனர்.