கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில், அரசு பேருந்தில் ஏறிய நபர், தான் 'ஸ்டாஃப்' என கூறி இலவசமாக பயணிக்க முயன்று கையும் களவுமாக சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியர் என மாற்றி பேசும் அந்த நபர், அரசு பேருந்து ஊழியர் என பொய் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறார். விசாரணையில், அவர் தனியார் பள்ளி ஆசிரியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.