பயணிகளோடு தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற பேருந்து..அதுவும் 50 அடி ஆழம்..திக் திக் காட்சிகள்

Update: 2024-02-16 08:18 GMT

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே தனியார் பேருந்து தடுப்புச்சுவரை இடித்து கொண்டு பள்ளத்தில் தொங்கிய விபத்தில், 40 வயது பெண்மணி பள்ளத்தில் உருண்டு சென்றதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் என தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலையில் வத்தலக்குண்டு பகுதியில் இருந்து இன்று காலை வேளையில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு கொடைக்கானலை நோக்கி வந்துள்ளது, அதே வேளையில் கொடைக்கானலில் இருந்து டிப்பர் லாரியும் வத்தலக்குண்டை நோக்கி சென்றுள்ளது, அப்போது எதிர் பாரத விதமாக தனியார் பேருந்து தடுப்பு சுவரை இடித்து கொண்டு பேருந்தின் முன் பகுதி பள்ளத்தில் தொங்கி விபத்துகுள்ளானது, இதில் 40 வயது மதிப்பு தக்க பெண்மணி சுமார் 30அடி பள்ளத்தில் உருண்டு சென்றதாகவும், பெண்மணியை தேடும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது, தனியார் பேருந்து அதிவேகத்தில் இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் மலைச்சாலையில் பேருந்து எதிரே வந்த லாரி வலது பக்க பாறையில் மோதி விபத்துகுள்ளாகியுள்ளது,இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பாக காணப்படுகிறது, இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்