கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்..அதிகாரிகள் வைத்த ஆப்பு.!பிரபல ஜூவல்லரிக்கு விழுந்த மரண அடி

Update: 2023-10-21 02:48 GMT

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரியில் முதலீடு செய்பவர்களுக்கு இரண்டு சதவீதம் வட்டி தருவதாக விளம்பரங்கள் செய்துள்ளனர். அதை தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் பலர் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், உறுதியளித்தபடி வட்டி தராத நிலையில், திருச்சி உள்ளிட்ட அனைத்து கிளைகளும் மூடப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டார்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கிளைகள், ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜுக்கு சொந்தமான 3 வீடுகள் என மொத்தம் 11 இடங்களில் சோதனை நடைபெற்றது. தமிழக முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1 கிலோ 900 கிராம் தங்கம், 22 கிலோ வெள்ளி, 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்