கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி திடலில் திடீர் தீ விபத்து

Update: 2024-01-21 12:29 GMT

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் வேளச்சேரி விளையாட்டு திடலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

மத்திய அரசின் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை இந்த ஆண்டு தமிழக அரசு நடத்தி வருகிறது... சுமார் 6 கோடி ரூபாய் வரையில் விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானத்திற்கு செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போட்டிகள் தொடங்கி 3வது நாளான இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள கேலோ விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெறும் இந்த மைதானத்தில் வெல்டிங் பணி செய்யும் போது வீரர்களுக்கு தேவையான பஞ்சு மெத்தை அமைக்கும் உபகரணங்களில் தீ விபத்து ஏற்பட்டது... உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பொழுது தீப்பொறி பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை வீரர்கள் தெரிவித்தனர். இதில் ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்காக வாங்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் தீயில் எரிந்து சேதம் ஆனதாகத் தெரிகிறது. 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அதி நவீன கேமரா சாதனங்களும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திடீர் தீ விபத்தால் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற இருந்த போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்பட்டன...

Tags:    

மேலும் செய்திகள்