திருச்சியில் கேலோ இந்தியா மல்லர் கம்பம் மகளிர் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தெலங்கானாவை சேர்ந்த 15 வயது வீராங்கனை நந்தினி, மல்லர் கம்பத்தில் பங்கேற்றபோது, தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வீராங்கனைக்கு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.