கனமழையால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. சீரழியும் அப்பாவிகளின் வாழ்வாதாரம்.. | Thanthitv

Update: 2024-06-05 13:14 GMT

இலங்கையில் 23 மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதோடு, வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொஸ்கம, சிதாவக்க மற்றும் மாலிம்பட ஆகிய மூன்று பிரதேசங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை இன்று முதல் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆய்வு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து உதவிகளையும், முன்னேற்பாடுகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்