செய்ய கூடாத வேலையை செய்த கேரள துணிக்கடை ஓனர் - கட்டிவைத்து வெளுத்தெடுத்த தமிழக பெண்கள்
கேரள மாநிலம் கொட்டத்தாரா சந்தையில் துணிக்கடை நடத்தும் ஜின்னா என்பவர், பெண்கள் உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக புகார் எழுந்தது. இதையறிந்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் சிலர், ஜின்னாவை கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்த போலீசார் ஜின்னா மீது வழக்குப்பதிவு செய்தனர். காயமடைந்த ஜின்னா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.