கேரளாவில், கோடை வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் இரவில் கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்,
எர்ணாகுளம் வெங்கூர் பஞ்சாயத்தில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. இதுவரை 51 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. குடிநீருக்காக பயன்படுத்தப்படும் குளத்தை சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதே நோய் பரவக் காரணம் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.