அணையில் நடந்த திடீர் மாற்றம்...பேரதிர்ச்சி காட்சிகள் | Kelavarapalli Dam

Update: 2024-10-20 15:23 GMT

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 44.28 அடி கொள்ளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 41.98 கனஅடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அ ணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரத்து 206 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், ரசாயன கழிவுகள் காரணமாக, அணையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் நுரைகள் பொங்கி, குவியல் குவியலாக, பஞ்சுப் பொதிகளை போல மிதந்து செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்