மனைவி அளித்த புகார்... வாய்க்காலில் கிடந்த கணவன் உடல்... கரூர் அருகே அதிர்ச்சி...

Update: 2024-08-18 09:15 GMT

கரூர் சின்னதாராபுரத்தில் காணாமல் போனவர் சடலமாக காணப்பட்டது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது

சின்ன தாராபுரம் அருகே ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமியை காணவில்லை என அவரது மனைவி ஜெயா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பொன்னுசாமிக்கு மது பழக்கம் இருப்பதாக கூறப்பட்டது. ஜெயா புகார் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், சின்ன தாராபுரம் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. அது காணாமல் போன பொன்னுசாமி என்பது தெரியவந்தது. அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொன்னுசாமி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து சின்ன தாராபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

-

Tags:    

மேலும் செய்திகள்