போலீஸ் பிடியில் தப்ப நினைத்துபயங்கரமாய் வாங்கி கட்டிய முக்கிய புள்ளிகள்..
கரூரில் துண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த ஜீவா என்பவர், கடந்த 22ஆம் தேதி மாயமானார். அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலசார், 9 பேரை கைது செய்தனர். விசாரணையில், 2021ஆம் ஆண்டில் மோகன்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உடந்தையாக ஜீவா இருந்ததாக கூறி, மோகன்ராஜின் நண்பர்கள் ஜீவாவை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் சசிகுமார் மற்றும் மதனை, ஆயுதங்களை எடுப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, தப்பியோட முயன்றபோது, சசிகுமாருக்கு கால் எலும்பும், மதனுக்கு கை எலும்பும் முறிந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதமுள்ள 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 6 பேரை திருச்சி மத்திய சிறையிலும், 18 வயது நிரம்பாத நபரை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர. மேலும், தப்பியோடிய கபில் என்பவரை தேடி வருகின்றனர்.