ஆற்றங்கரையில் விவசாயிக்கு நடந்த கொடூரம் - கரூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-07-15 14:37 GMT

கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையில், நபர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகவேல். கரூர் மாவட்டம் மண்டிக்கடை அருகேயுள்ள அமராவதி ஆற்றங்கரையில் கொட்டகை அமைத்து தங்கியிருந்த இவர், மாட்டு வண்டி ஓட்டி விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முருகவேலுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், கொட்டகைக்குள் அமர்ந்து மது அருந்தி இருக்கின்றனர். இதில், ஏற்பட்ட தகராறில், இருவரும் முருகவேலை தலையில் கல்லை போட்டு கொலை செய்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முருகவேலின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்