கோயில் இடங்களை மீட்க வந்த அதிகாரிகள்..அதிர்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - கரூரில் பரபரப்பு

Update: 2024-09-18 10:19 GMT

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடங்கள் என பெயர் பலகை வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் வெண்ணைமலையில், பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த இடத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டியும், விவசாயம் செய்து வரும் பொதுமக்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை அமைக்கும் பணியில் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசுப் பணியினை செய்யவிடாமல் தடுத்ததாக கூறி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்