தொட்டியில் விழுந்த குழந்தை..திடீரென சீறிப்பாய்ந்த தண்ணீர்...சடலமாய் மிதந்து வந்த உயிர்

Update: 2024-08-25 09:45 GMT

விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்த மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள சின்ன களத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். திருமணமான முருகேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகனான மூன்று வயது குழந்தை தர்ஷித் அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த குழந்தைகளுடன் விளையாண்டு இருக்கிறான். அப்போது அங்கே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இருக்கிறான். அந்த நேரத்தில் மோட்டார் போடப்பட்டு இருந்ததால் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருந்ததால், தண்ணீர் செல்லும் குழாயில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறான் தர்ஷித். இது பற்றி தகவல் கிடைத்த கிராம மக்கள் தண்ணீர் செல்லக்கூடிய மூன்று பகுதிகளில் குழிகளைத் தோண்டிய போது மூன்றாவது குழியில் தர்ஷித் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்