ஒரேயொரு தவறால் ஒரே நாளில் ஒரே இடத்தில் 10 விபத்துகள் - அதிர்ந்த போலீஸ்.. மிரளவிடும் CCTV
ஒரேயொரு தவறால் ஒரே நாளில் ஒரே இடத்தில் 10 விபத்துகள் - அதிர்ந்த போலீஸ்.. மிரளவிடும் CCTV
காரைக்காலில், நிலக்கரி துகள்கள் சிதறியதால் ஏற்பட்ட விபத்துகள் எதிரொலியாக, 21 லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.வாஞ்சூர் பகுதியில் அதானிக்கு சொந்தமான தனியார் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி இங்கிருந்து லாரி, ரயில் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் லாரிகள் முழுமையாக மூடப்படாமல் உள்ளதால் அதிலிருந்து சாலையில் சிதறிய நிலக்கரியால் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு, அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன், விதிகளை மீறும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், விதிகளை மீறியதாக தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரியை ஏற்றி வந்த21 லாரிகள் மீது அபராதம் விதித்தனர்.