கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் தன் 3 மகன்களுடன் சேர்ந்து தான்சானியா நாட்டில் இருந்து முந்திரியை இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, மகன்களுடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்கிய சுந்தரராஜன், முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் வசூல் செய்திருக்கிறார். இதில், 400க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் 30கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன் மகன்களுடன் சேர்ந்து பண மோசடி செய்து சுந்தரராஜன் தலைமறைவானதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த சுந்தரராஜன், அவரின் மகன் அரனீஸ் ராஜன் மற்றும் நிறுவன மேலாளர் அனீஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக இருக்கும் சுந்தரராஜ் மகன்கள் இருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.