"அவன நான் தான் கொன்னேன்"..கலெக்டர் ஆபிஸை அலறவிட்ட ஆசாமி - அடக்க முடியாமல் தவித்த போலீசார்

Update: 2024-08-23 08:49 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தபோது, மதுபோதையில் தரக்குறைவாக பேசிய நபரை அதிகாரிகள் கயிற்றால் கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். எறும்புகாடு பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பியான பிரவீன், நவீன் ஆகியோர், மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது, மதுபானம் தொடர்பாக இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். இதனை தட்டிக்கேட்ட அதிகாரிகளை, நவீன் தரக்குறைவாக பேசியதால் அவரை கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்