குமரியை நடுங்கவிட்ட கொலை.. 2 ஆண்டுகள் கழித்து கிடைத்த பதில்.. போலீஸுக்கு குவியும் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை.கட்டிட தொழிலாளியான இவர் மேலகிருஷ்ணபுதூரில் கடந்த 2022ம் கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ராஜதுரைக்கும் பைக்கில் வந்த மற்றொருவருக்கும் தகராறு நடந்தது தெரியவந்தது. ஆனால் பைக்கில் வந்த மற்றொரு நபரின் அடையாளம் தெரியாமல், இரண்டு ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் இருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன எண்ணை தொடர்ந்து கவனித்து வந்த போலீசார், புத்தேரி பகுதியை சேர்ந்த நாகராஜனை விசாரணை செய்தனர். கொலை நடந்த அன்று, ராஜதுரை, நாகராஜனின் இரு சக்கர வாகன சாவியை எடுத்துச் சென்றதாகவு்ம், இதில் ஏற்பட்ட தகராறில், ராஜதுரையை அடித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. ராஜதுரை இறந்த செய்தி வெளியான மறுநாளே நாகராஜன் தலைமறைாவானார். பின்னர் மீண்டும் சகஜாமாக நடமாட துவங்கினார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாகன எண்ணை கொண்டு, 2 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடம் பாராட்டுதலை பெற்றுள்ளது.