காதலியின் திருமணத்தை நிறுத்த வாலிபர் செய்த காரியம்.. அதிர்ந்த பெண் வீட்டார்

Update: 2024-08-19 17:09 GMT

ஒருதலை காதல் விவகாரத்தில், காதலிக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த இளைஞர், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நோட்டீஸாக விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒருதலை காதல் பெயரில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் தந்தை, போலீசில் புகாரளித்து இளைஞரை எச்சரித்திருக்கிறார். தொடர்ந்து, மகளுக்கு திருமண ஏற்பாடுகளும் அவர் செய்து வந்திருக்கிறார். இதையறிந்த ராஜேஷ், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நோட்டீஸாக ஊர் முழுவதும் விநியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணைநடத்தி வந்த போலீசார், இளைஞர் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்