கன்னியாகுமரி மாவட்டத்தில், கடற்கரை பகுதியில் இருந்து அரிய வகை மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, குளச்சல் பகுதி மீனவ கிராம மக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழுதேசம், கொல்லங்கோடு கிராமங்களுக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து அரிய வகை மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், பதாகைகளை ஏந்தியபடியும் ஊர்வலமாகச் சென்றனர்.