திருச்செந்தூரில் தேங்கியுள்ள வெள்ள நீர்... அதிகாரிகளுக்கு கனிமொழி எம்.பி போட்ட உத்தரவு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி மற்றும் வட்டன் விளை ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை ராட்சச மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணிகளை கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சடையனேரி குளம் மருதூர்கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளாளன்விளை, வட்டன்விளை ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சூழ்ந்தது. இதனை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர்,
தேங்கிய மழைநீர் விரைவாக அகற்றப்பட வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்